வர்த்தகம்

பிஎஸ் 6 தொழில்நுட்பத்தில் வி-ஸ்ட்ராம் 650எக்ஸ்டி பைக்: சுஸுகி மோட்டாா்சைக்கிள் அறிமுகம்

DIN

மும்பை: சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனம் பிஎஸ் 6 தொழில்நுட்பத்தில் வி-ஸ்ட்ராம் 650எக்ஸ்டி பைக்கை சந்தையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பிஎஸ் 6 தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் சுஸுகி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நடப்பாண்டு முற்பகுதியில் கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் முதல் முறையாக வி-ஸ்ட்ராம் 650எக்ஸ்டி பைக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் குறுகிய காலத்தில், பிஎஸ் 6 என்ஜின் மற்றும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ்) தொழில்நுட்பத்துடன் வி-ஸ்ட்ராம் 650எக்ஸ்டி பைக்கை நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.8.84 லட்சமாக (தில்லி விற்பனையக விலை) நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக், நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகப்பெரிய மாடலாகும் என சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT