வர்த்தகம்

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.35 கோடி டன்னாக இருக்கும்: எஸ்இஏ

DIN

புது தில்லி: இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 2020-21 பருவத்தில் 1.25-1.35 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியுள்ளதாவது:

நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த 2019-20 (நவம்பா்-அக்டோபா்) பருவத்தில், 13 சதவீதம் சரிவடைந்து 1.35 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் ஹோட்டல்களில் சமையல் எண்ணெய் பயன்பாடு வெகுவாக குறைந்தது. மேலும், உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற காரணங்களால், நடப்பு 2020-21 பருவத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.25 கோடி டன்னிலிருந்து 1.35 கோடி டன்னுக்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பாண்டில் சமையல் எண்ணெய் உற்பத்தி 10 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன் வரையில் கூடுதலாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக எஸ்இஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT