பங்குச்சந்தை வணிகம் இன்று உயர்வுடன் தொடங்கியது. நேற்றைய வணிகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 43,725 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125 புள்ளிகள் சரிந்து 12,835 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது.
பங்குச்சந்தையில் அதிகபட்சமாக டைடன் நிறுவனத்தின் பங்குகள் 3.10 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஃபின்சர்வீஸ், நெஸ்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன.
ADVERTISEMENT
இண்டஸ்இண்ட், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.