வர்த்தகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

13th Nov 2020 11:08 AM

ADVERTISEMENT

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 25.86 புள்ளிகள் சரிந்து 43,341.79 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.054 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.35 புள்ளிகள் சரிந்து 12,680.30 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.075 சதவிகிதம் சரிவாகும்.

கடந்த 8 நாட்களாக உயர்வில் தொடங்கி உயர்வுடனேயே முடிந்த பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று சரிவுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

பங்குச்சந்தையில் அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வீஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏஸியன் பெயின்ட்ஸ், டைட்டன், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன.

லார்சன் & டோப்ரோ, எஸ்.பி.ஐ. வங்கி, இந்துஸ்இன்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

Tags : Sensex
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT