வர்த்தகம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் ரூ.2,725 கோடி விலக்கல்

11th Nov 2020 02:06 AM

ADVERTISEMENT

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் சென்ற அக்டோபரில் ரூ.2,725 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர்.
 இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக கடந்த அக்டோபரிலும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.2,725 கோடி மதிப்பிலான முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளனர். லார்ஜ் மற்றும் மிட்-கேப் திட்டங்களை தவிர்த்து ஏனைய அனைத்து திட்டங்களிலிருந்தும் கணிசமான முதலீடுகள் வெளியேறியுள்ளன.
 கடந்த செப்டம்பரில் கடன் பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் ரூ.51,900 கோடியை வெளியே எடுத்திருந்த நிலையில், அக்டோபரில் ரூ.1.1 லட்சம் கோடியை அவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
 ஒட்டுமொத்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்தும் செப்டம்பரில் ரூ.52,000 கோடி வெளியேறிய நிலையில் அக்டோபரில் நிகர அளவில் ரூ.98,576 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 நடப்பாண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி கடன் நிதியங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பின் அளவு ரூ.26.86 லட்சம் கோடியாக இருந்தது. இது, அக்டோபர் இறுதியில் ரூ.28.22 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
 பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் செப்டம்பரில் வெளியேறிய முதலீடான ரூ.734 கோடியுடன் ஒப்பிடுகையில், அக்டோபரில் அதைவிட பல மடங்கு அளவுக்கு முதலீட்டு வரத்து (ரூ.2,725 கோடி) இருந்தது.
 கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக பங்கு சார்ந்த திட்டங்களில் இருந்து நடப்பாண்டு ஜூலையில் ரூ.2,480 கோடியும், ஆகஸ்டில் ரூ.4,000 கோடியும் முதலீடு வெளியே எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக ஜூன் மாதத்தில் இத்தகைய திட்டங்கள் ரூ.240.55 கோடி முதலீட்டை ஈர்த்தது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT