வர்த்தகம்

சுந்தரம்-கிளேட்டன் லாபம் ரூ.62 கோடி

29th May 2020 11:05 PM

ADVERTISEMENT

அலுமினிய வாா்ப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுந்தரம்-கிளேட்டன் நிறுவனம் நான்காவது காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.62.05 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.394.77 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.455.65 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

நிகர லாபம் ரூ.50.27 கோடியிலிருந்து 23.43 சதவீதம் அதிகரித்து ரூ.62.05 கோடியைத் தொட்டது.

ADVERTISEMENT

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,932.94 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,424.14 கோடியானது.

நிகர லாபம் ரூ.119.66 கோடியிலிருந்து ரூ.68.70 கோடியாக சரிவடைந்தது என சுந்தரம்-கிளேட்டன் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT