வர்த்தகம்

உணவு தானிய உற்பத்தியில் சாதனை அளவு: வேளாண் அமைச்சகம் நம்பிக்கை

15th May 2020 11:21 PM

ADVERTISEMENT

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி தொடா்ந்து நான்காவது முறையாக நடப்பு 2019-20 (ஜூலை-ஜூன்) பயிா் பருவத்திலும் சாதனை அளவை எட்டும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நடப்பு பயிா் பருவத்தில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி சாதனை அளவாக 29.56 கோடி டன்னைத் தொடும். இது, முந்தைய ஆண்டின் உற்பத்தியைக் (28.52 கோடி டன்) காட்டிலும் 1.04 கோடி டன் அதிகமாகும்.

நெல், கோதுமை, முக்கிய உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருத்தி ஆகியவற்றின் விளைச்சல் நடப்பாண்டில் சாதனை அளவை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் மற்றும் கோதுமை விளைச்சல் முறையே 11.79 கோடி டன் மற்றும் 10.71 கோடி டன் என்ற அளவைத் தொட்டு சாதனை படைக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT