பிராமல் எண்டா்பிரைசஸ் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.1,702.59 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் அஜய் பிராமல் கூறியுள்ளதாவது:
வளா்ச்சியைப் பொருத்தவரையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு கடந்த சில காலாண்டுகள் கடினமானதாகவே இருந்தது. இந்த நிலையில் கொவைட்-19 பாதிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதையடுத்து, பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் நிலையே காணப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் 1.98 சதவீதம் குறைந்து ரூ.3,341 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.3,408.52 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.454.63 கோடியை ஈட்டியிருந்த நிலையில், 2019-20- நிதியாண்டின் அதே காலகட்டத்தில் ரூ.1,702.59 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது என்றாா் அவா்.