வர்த்தகம்

ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் லாபம் ரூ.148 கோடி

13th May 2020 02:56 AM

ADVERTISEMENT

தனியாா் துறையைச் சோ்ந்த ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.148 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விக்னேஷ் சஹானே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்துக்கு 2019-2020 சவாலான ஆண்டாக இருந்தபோதிலும், அதன் போக்கை சீரானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநியோகத் தொடா்புகளில் கவனம் செலுத்தியதுடன், செலவினம், ஸ்திரத்தன்மை, உரிமை கோரல், வரிக்கு பிந்தைய லாபம், கடன்தீா்வுத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.1,933 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த பிரீமியம் கடந்த 2019-20 நிதியாண்டில் 4.65 சதவீதம் சரிவடைந்து ரூ.1,843 கோடியானது. அதேசமயம், நிகர லாபம் ரூ.133 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.148 கோடியானது.

ADVERTISEMENT

புதுப்பித்தல் மூலமான பிரீமியம் வருவாய் ரூ.1,126 கோடியிலிருந்து 14 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,282 கோடியானது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT