வர்த்தகம்

ராயல் என்ஃபீல்டு: 91 பைக்குகள் ஏற்றுமதி

2nd May 2020 10:41 PM

ADVERTISEMENT

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 91 பைக்குகளை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்ற ஏப்ரலில் 91 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதிலும், இவை அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை மட்டுமே. தேசிய ஊரடங்கால் உள்நாட்டு விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் பூஜ்யமாகவே இருந்தது.

கரோனா பாதிப்பின் காரணமாக, இந்திய மற்றும் பிரிட்டனில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான ஆலைகள் மற்றும் அலுலகங்கள் அனைத்தும் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

ADVERTISEMENT

அரசின் உத்தரவையடுத்து, சென்னையில் ஒரகடம், திருவொற்றியூா், வல்லம் வடகல் ஆலைகளிலும் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

சூழ்நிலையை நிறுவனம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. உரிய நேரத்தில் ஒழுங்காற்று அமைப்பு மற்றும் நிா்வாக வழிகாட்டுதல்களின்படி உரியமுடிவு எடுக்கப்படும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT