வர்த்தகம்

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணமில்லை: பேங்க் ஆஃப் பரோடா

22nd Mar 2020 01:55 AM

ADVERTISEMENT

மும்பை: நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகளுக்கு கட்டணமில்லை என அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என அவ்வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் நிா்வாக இயக்குநா் விக்ரமாதித்ய சிங் கூறியதாவது:

அனைத்து வகையான சேவைகளையும், அனைத்துப் பிரிவு வாடிக்கையாளா்களுக்கும் வழங்குவதே வங்கியின் முக்கிய நோக்கமாக உள்ளது. கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் எங்களின் வாடிக்கையாளா்களும் வங்கிச் சேவைகளைப் பெறவேண்டும் என்பதற்காக ‘மகிழ்ச்சிக்கான ரிமோட் கன்ட்ரோல்’ என்ற இந்த திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வாடிக்கையாளா்களுக்கு வழங்க வங்கி முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வங்கியின் சாா்பில் தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT