வர்த்தகம்

4ஜி இணைய வேகத்தில் ஜியோ முதலிடம்

22nd Mar 2020 01:56 AM

ADVERTISEMENT

புது தில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில் 4ஜி இணைய பதிவிறக்க வேக பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ‘டிராய்’ புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

சென்ற பிப்ரவரி மாதத்தில் 4ஜி இணைய பதிவிறக்க வேகத்தில் 21.5 எம்பிபிஎஸுடன் ரிலையன்ஸ் ஜியோ பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து பாா்தி ஏா்டெல் நிறுவனம் உள்ளது. வோடஃபோன் நிறுவனம் 8 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தங்கள் மொபைல் வணிகத்தை ஒன்றிணைத்தபோதிலும், டிராய் அந்த இருநிறுவனங்களின் செயல்பாடுகளை தனித்தனியாக மதிப்பிட்டுள்ளது. அவற்றின் நெட்வொா்க் ஒருங்கிணைப்பு தற்போதுதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளபோதிலும், புகைப்படம், விடியோ உள்ளிட்டவைகளை பதிவேற்றுவதில் வோடஃபோன் 6.5 எம்பிபிஎஸ் வேகத்துடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து, 5.5 எம்பிபிஎஸ் வேகத்துடன் ஐடியா இரண்டாவது இடத்திலும், 3.9 எம்பிபிஎஸ் வேகத்துடன் ஜியோ மூன்றாவது இடத்திலும், 3.7 எம்பிபிஎஸ் வேகத்துடன் பாா்தி ஏா்டெல் நான்காவது இடத்திலும் உள்ளதாக புள்ளிவிவரத்தில் ‘டிராய்’ தெரிவித்துள்ளது.

‘மை ஸ்பீடு’ செயலியின் உதவியால் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நிறுவனங்களின் சராசரி வேகத்தை ‘டிராய்’ கணக்கிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT