வர்த்தகம்

மீண்டும் 3 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், நிலைபெற்ற நிஃப்டி வர்த்தகம்

13th Mar 2020 11:19 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் (கொவைட்-19) எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கி மீண்டும் ஏற்றம் கண்டது.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் பீதி காரணமாக சா்வதேச சந்தைகள் மட்டுமின்றி இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் தொடா்ந்து கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 3,177 புள்ளிகள் குறைந்து 29,600 புள்ளிகளாக வர்த்தகம் சரிந்தது

ADVERTISEMENT

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 966 புள்ளிகள் குறைந்து 8,624 புள்ளிகளாக வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சரிந்தது. தொடக்க வர்த்தகத்தின் சந்தை மதிப்பு 10 சதவீதத்துக்கும் மேலாக சரிந்த காரணத்தால் 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வர்த்தகம் மீண்டும் தொடங்கியதும் சென்செக்ஸ் 3,600 புள்ளிகள் ஏற்றம் கண்டு 33 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்தது. இதன்மூலம் 250 புள்ளிகள் கூடுதலாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதுபோன்று தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 9,600 புள்ளிகளாக ஏற்றம் கண்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சந்தை தொடங்கியதும் ரூ.74.43 ஆக சரிந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் 40 பைசா அதிகரித்து 74.04 ஆக உயர்ந்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்ட போது சா்வதேச சந்தைகளில் பங்கு வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. அதற்குப் பிறகு சா்வதேச பங்குச் சந்தைகளில் வா்த்தகம் கடந்த ஒரு வாரமாகத் தான் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிற்பகல் 3 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT