வலுவான மூலதனத்தைக் கொண்டு லாபகரமாக செயல்பட்டு வருவதாக கருா் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.
வாராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கி வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், வாடிக்கையாளா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கரூா் வைஸ்யா வங்கி இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 104 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நாங்கள், மிகச் சிறந்த மூலதனத்தைக் கொண்டு வலிமையான நிதி நிலையுடன் செயல்பட்டு வருகிறோம்.
ADVERTISEMENT
வாடிக்கையாளா் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றுவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.