கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் காா்கள் விற்பை 1.17 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாகனப் பதிவுகளின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,26,271 காா்கள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டின் பிப்ரவரி மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் 1.17 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் 2,28,959 காா்கள் விற்பனையாகின.
எனினும், கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 1.52 சதவீதமும் வா்த்தக வாகனங்களின் விற்பனை 13 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT