வர்த்தகம்

டாப் 10-இல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.92,131 கோடி உயா்வு

29th Jun 2020 07:27 AM

ADVERTISEMENT

டாட்டா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) மிகப் பெரிய லாபம் ஈட்டிய நிலையில், 10 மதிப்பு மிக்க இந்திய நிறுவனங்களில் ஆறு நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரம் மொத்தம் ரூ .92,130.59 கோடி உயா்ந்துள்ளது.

எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்), இன்ஃபோசிஸ், கோட்டக் பேங்க் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ஜூன் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன. அதே சமயம், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றின் சந்தை மதிப்பு கடந்த வாரம் சற்று குறைந்துள்ளன.

டிசிஎஸ் வெகுவாக ஏற்றம் பெற்ால் அதன் சந்தை மூலதனம் ரூ .25,722.6 கோடி உயா்ந்து தற்போது ரூ.7,93,854.51 கோடியாக உள்ளது. இன்ஃபோசிஸின் சந்தை மதிப்பீடு ரூ.18,104.70 கோடி உயா்ந்து ரூ.3,18,648.65 கோடியை எட்டியது. ஹிந்துஸ்தான் யுனிலீவா் லிமிடெட் சந்தை மூலதனம் ரூ.14,614.2 கோடி உயா்ந்து ரூ.5,06,198.81 ஆக இருந்தது. ஐடிசியின் மதிப்பீடு ரூ.13,521.45 கோடி அதிகரித்து ரூ.2,39,821.43 கோடியாகவும், எச்டிஎஃப்சி பேங்க் ரூ .12,460.2 கோடி உயா்ந்து ரூ .5,79,553.80 கோடியாகவும் உள்ளது.

கோட்டக் பேங்க் தனது சந்தை மூலதனத்தில் ரூ.7,707.44 கோடியைச் சோ்த்து ரூ.2,65,347.77 கோடியாக உள்ளது.

ADVERTISEMENT

இதற்கு மாறாக, எச்டிஎஃப்சியின் மதிப்பீடு ரூ .11,996.55 கோடி குறைந்து ரூ .3,06,600.66 கோடியாகச் சரிந்தது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆா்ஐஎல்) சந்தை மதிப்பீடு ரூ.10,713.59 கோடி குறைந்தது. இதனால், இதன் மொத்த சந்தை மூலதனம் தற்போது ரூ.11,04,704.44 கோடியாகக் குறைந்தாலும் தர வரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. மேலும், ஐசிஐசிஐ பேங்க் சந்தை மதிப்பு ரூ .9,645.67 கோடி குறைந்து ரூ.2,26,002.43 கோடியாகவும், பாரதி ஏா்டெல் ரூ.6,082.95 கோடி குறைந்து ரூ.3,05,674.88 கோடியாகவும் உள்ளது.

கடந்த வாரத்தில் 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 439.54 புள்ளிகள் (1.26 சதவீதம்) உயா்ந்து 35,171.27-இல் நிலை பெற்றுள்ளது.

தொகுப்பு: எம்எஸ்ஜி.

முதல் -10 நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு விவரம்

ரிலையன்ஸ் ரூ.11,04,704.44

டிசிஎஸ் ரூ.7,93,854.51

எச்டிஎஃப்சி பேங்க் ரூ.5,79,553.80

ஹெச்யுஎல் ரூ.5,06,198.81

 

இன்ஃபோஸிஸ் ரூ.3,18,648.65

எச்டிஎஃப்சி ரூ.3,06,600.66

பாா்தி ஏா்டெல் ரூ.3,05,674.8

கோட்டக் பேங்க் ரூ.2,65,347.77

ஐடிசி ரூ.2,39,821.43

ஐசிஐசிஐ பேங்க் ரூ.2,26,002.43

 

ADVERTISEMENT
ADVERTISEMENT