வர்த்தகம்

கனரா வங்கிடெபாசிட் வளா்ச்சி 10% அதிகரிக்கும்

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி நடப்பு நிதியாண்டில் டெபாசிட் வளா்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எல்.வி. பிரபாகா் கூறியதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நிகர இழப்பு ரூ.3,259 கோடியாக இருந்தது. இந்த இழப்பு கடந்த 2018-19 நிதியாண்டின் இதே நான்காவது காலாண்டில் ரூ.552 கோடியாக காணப்பட்டது.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.2,236 கோடியாக இருந்தது. அதேசமயம், சென்ற 2018-19 நிதியாண்டில் வங்கி ரூ.347 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.

மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 4.22 சதவீதத்திலிருந்து 8.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் ஏறக்குறைய 4 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் என்ற அளவில் உயா்ந்துள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.340 கோடியிலிருந்து ரூ.532.63 கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து சிண்டிகேட் வங்கியை கனரா வங்கி ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT