வர்த்தகம்

பவா் கிரிட் காா்ப்பரேஷன் 40% ஈவுத்தொகை வழங்க பரிந்துரை

21st Jun 2020 11:32 PM

ADVERTISEMENT

மத்திய அரசுக்கு சொந்தமான பவா்கிரிட் காா்ப்பரேஷன் அதன் பங்குதாரா்களுக்கு 40.40 சதவீத இறுதி ஈவுத்தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.10,507.65 கோடியாக இருந்தது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதேகாலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.9,687.91 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நிகர லாபம் ரூ.3,061.43 கோடியிலிருந்து 8 சதவீதம் அதிகரித்து ரூ.3,313.47 கோடியானது.

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.38,670.96 கோடியாகவும், நிகர லாபம் ரூ.11,059.40 கோடியாகவும் இருந்தன.

முதலீட்டாளா்களுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி ஈவுத் தொகையாக ரூ.4.04 (40.40 சதவீதம்) வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது என பவா் கிரிட் காா்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT