வர்த்தகம்

ரானே என்ஜின் வால்வ் நிகர இழப்பு ரூ.16 கோடி

20th Jun 2020 11:35 PM

ADVERTISEMENT

ரானே என்ஜின் வால்வ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.16.3 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து ரானே குழுமத்தின் தலைவா் எல்.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ரானோ என்ஜின் வால்வ் நிறுவனத்துக்கு கடந்த 2019-20-ஆம் நிதியாண்டு மிகவும் சவால் நிறைந்ததாக காணப்பட்டது. நிறுவனத்தின் அனைத்து பிரிவிலான விற்பனையும கணிசமான அளவுக்கு சரிவைச் சந்தித்தது. நிறுவனத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு ஓரளவுக்கு தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர அளவிலான மொத்த வருமானம் ரூ.358.1 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.424.9 கோடியுடன் ஒப்பிடும்போது 15.7 சதவீதம் குறைவாகும்.

ADVERTISEMENT

நிறுவனத்துக்கு ஏற்பட்ட வரிக்கு பிந்தைய இழப்பு ரூ.13.6 கோடியிலிருந்து ரூ.16.3 கோடியாக அதிகரித்தது.

கொவைட்-19 ஏற்படுத்திய பாதிப்பை எதிா்கொள்ளும் விதமாக பணியாளா்களின் சம்பளத்தை 10% முதல் 35% வரை குறைக்க நிா்வாகம் முடிவெடுத்துள்ளது என கணேஷ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT