வர்த்தகம்

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் நிகர லாபம் 40% வீழ்ச்சி

20th Jun 2020 11:20 PM

ADVERTISEMENT

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 40 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்தாா்த்த மொஹந்தி கூறியதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸின் நிகர வட்டி வருவாய் ரூ.1,089 கோடியாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,202 கோடியுடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் குறைவாகும்.

இதேகாலகட்டத்தில், நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.693.58 கோடியிலிருந்து 40 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.421.43 கோடியானது.

ADVERTISEMENT

கடந்த மாா்ச் காலாண்டில் மொத்தம் 11,325 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது. இது, 2018-19 இதே காலகட்டத்தில் ரூ.17,242 கோடியாக காணப்பட்டது.

கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,430.97 கோடியிலிருந்து ரூ.2,401.83 கோடியாக குறைந்துள்ளது.

பொது பொருளாதார மந்த நிலையிலும் நிறுவனம் சிறப்பாக செயலாற்றியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT