வர்த்தகம்

சிட்டி யூனியன் வங்கி இழப்பு ரூ.95 கோடி

20th Jun 2020 06:51 AM

ADVERTISEMENT

தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி நான்காவது காலாண்டில் ரூ.95.25 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.1,220.98 கோடியாக இருந்தது.இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,131.44 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

கணக்கீட்டு காலாண்டில், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.90.67 கோடியிலிருந்து ரூ.450.38 கோடியாக பன்மடங்கு அதிகரித்தது. இதையடுத்து, மாா்ச் காலாண்டில் வங்கி ரூ.95.25 கோடி இழப்பை சந்தித்தது.

ADVERTISEMENT

மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.95 சதவீதத்திலிருந்து 4.09 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.81 சதவீதத்திலிருந்து 2.29 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது என சிட்டி யூனியன் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT