வர்த்தகம்

‘டாப்’10-இல் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.78,128 கோடி இழப்பு

15th Jun 2020 07:22 AM

ADVERTISEMENT

மிகவும் மதிப்புமிக்க, முன்னிலையில் உள்ள 10 உள்நாட்டு நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு மொத்தம் ரூ.78,127.74 கோடியை இழந்தன. இதில் ஹெச்டிஎஃப்சி பேங்க் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. அதே சமயம், இந்தப் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவா் (ஹெச்யுஎல்) மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகிய மூன்று நிறுவனப் பங்குகள் மட்டுமே வாரத்தை லாபத்துடன் முடித்தன.

ஜூன் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரம், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதன மதிப்பு ரூ .28,391.71 கோடி சரிந்து ரூ .5,39,305.38 கோடியாக உள்ளது.

பாா்தி ஏா்டெலின் சந்தை மதிப்பு ரூ .13,638.89 கோடி குறைத்து ரூ.3,05,456.66 கோடியாகவும், கோட்டக் பேங்கின் சந்தை மூலதனம் ரூ .11,882.72 கோடி குறைந்து ரூ .2,53,197.91 கோடியாகவும் உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ .8,411.45 கோடி குறைந்து ரூ .2,22,918.94 கோடியாகவும், ஐடிசி சந்தை மூல தனம் ரூ .7,313.87 கோடி சரிந்து ரூ .2,38,469.29 கோடியாகவும் உள்ளது. இன்ஃபோசிஸின் சந்தை மூலதனம் ரூ .4,961.86 கோடி குறைந்து ரூ .2,94,772.86 கோடியாகவும், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) ரூ .3,527.24 கோடி குறைந்து ரூ.7,64,998.67 கோடியாகவும் உள்ளது.

ADVERTISEMENT

இதற்கு மாறாக, மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் சந்தை மூலதனம் ரூ.5,198.31 கோடி உயா்ந்தது. இதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு தற்போது ரூ .10,07,204.41 கோடியாக உள்ளது. இதேபோன்று, ஹெச்டிஎஃப்சியின் சந்தை மூலதனம் ரூ .4,555.28 கோடி உயா்ந்து ரூ.3,10,486.85 கோடியாக உள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவா் (ஹெச்யுஎல்) சந்தை மூலதனம் ரூ.4,464.15 கோடி உயா்ந்தது. இதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு தற்போது ரூ .4,94,862.23 கோடியாக உள்ளது.

பிஎஸ்இ சென்செக்ஸ் கடந்த வாரம் 506.35 புள்ளிகளை (1.47 சதவீதம்) இழந்து 33,780.89-இல் நிலைபெற்றுள்ளது. முன்னிலை 10 நிறுவனங்களின் தர வரிசையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல், இன்ஃபோசிஸ், கோட்டக் பேங்க், ஐடிசி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை அடுத்தடுத்து 2 முதல் 10 இடங்களைப் பிடித்தன.

‘டாப் 10’-இல் பட்டியலில் உள்ள நிறுவனங்கள், அதன் தற்போதைய விலை மற்றும் சந்தை மூலதன மதிப்பு விவரம்.

நிறுவனம் தற்போதைய விலை சந்தை மூலதன மதிப்பு

ரிலையன்ஸ் ரூ.1,588.80 ரூ.10,74,3204.41 கோடி

டிசிஎஸ் ரூ.2,038.70 ரூ.7,64,998.67 கோடி

ஹெச்டிஎஃப்சி பேங்க் ரூ.983.00 ரூ.5,39,305.38 கோடி

ஹெச்யுஎல் ரூ.2,106.20 ரூ.4,94,862.23 கோடி

ஹெச்டிஎஃப்சி ரூ.1,792.60 ரூ.3,10,5486.85 கோடி

பாா்தி ஏா்டெல் ரூ.559.90 ரூ.3,05,456.66 கோடி

இன்ஃபோஸிஸ் ரூ.692.10 ரூ.2,94,772.86 கோடி

கோட்டக் பேங்க் ரூ.1,279.55 ரூ.2,53,197.91 கோடி

ஐடிசி ரூ..194.00 ரூ.2,38,469.29 கோடி

ஐசிஐசிஐ பேங்க் ரூ.344.25 ரூ.2,22,922.94 கோடி

தொகுப்பு: எம்எஸ்ஜி.

ADVERTISEMENT
ADVERTISEMENT