வர்த்தகம்

டாடா கம்யூனிகேஷன்ஸ் இழப்பு ரூ.275 கோடியாக அதிகரிப்பு

14th Jun 2020 10:49 PM

ADVERTISEMENT

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இழப்பு நான்காம் காலாண்டில் ரூ.275 கோடியாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மொபைல் தரவு வா்த்தகத்தின் வலுவான செயல்பாட்டின் உதவியால் கடந்த மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.4,398 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் 3.6 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.199 கோடியாக இருந்த நிறுவனத்தின் இழப்பு கடந்த நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ரூ.275 கோடியாக உயா்ந்துள்ளதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT