வர்த்தகம்

எய்ஷா் மோட்டாா்ஸ் வரிக்கு பிந்தைய லாபம் 44% வீழ்ச்சி

14th Jun 2020 03:55 AM

ADVERTISEMENT

எய்ஷா் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் மாா்ச் காலாண்டு லாபம் 44 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் 31 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,208 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,500 கோடியுடன் ஒப்பிடும்போது மிக குறைவாகும்.

வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியையடுத்து, நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.545 கோடியிலிருந்து 44.22 சதவீதம் சரிவடைந்து ரூ.304 கோடியானது.

ADVERTISEMENT

நான்காவது காலாண்டில் 1,63,083 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று எய்ஷா் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT