வர்த்தகம்

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிகர இழப்பு ரூ.242 கோடி

14th Jun 2020 10:46 PM

ADVERTISEMENT

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.242.06 கேடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.1,951.84 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,148.19 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவு. வட்டி வருமானம் குறைந்ததே வருவாய் சரிவுக்கு முக்கிய காரணம்.

2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.379.77 கோடியாக இருந்தது. இந்த நிலையில், கொவைட்-19 பாதிப்புக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட அதிக ஒதுக்கீடு காரணமாக கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.242.06 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,191.5 கோடியிலிருந்து 45.8 சதவீதம் சரிந்து ரூ.646.2 கோடியானது.

2019 மாா்ச் 31 நிலவரப்படி ரூ.84,722 கோடியாக இருந்த நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 2 சதவீதம் சரிவடைந்து ரூ.83,346 கோடியானது என பிஎன்பி ஹவுசிங் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT