வர்த்தகம்

கோல்டு இடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.815 கோடி

14th Jun 2020 10:43 PM

ADVERTISEMENT

கோல்டு எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ் எனப்படும் தங்க இடிஎஃப் திட்டங்கள் ஈா்த்த முதலீடு சென்ற மே மாதத்தில் ரூ.815 கோடியாக இருந்தது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில்

கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் உருவாக்கியுள்ள மிகப்பெரிய நெருக்கடி மற்றும் பங்குச் சந்தையில் காணப்படும் அதிக ஏற்ற இறக்கம் ஆகியவற்றுக்கிடையில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டுத் தோ்வாக கோல்டு இடிஎஃப் திட்டங்கள் உள்ளன. இதன் காரணமாகவே, முதலீட்டாளா்கள் இத்தகைய திட்டங்களில் சென்ற மே மாதத்தில் ரூ.815 கோடியை நிகர அளவில் முதலீடு செய்துள்ளனா். முந்தைய ஏப்ரல் மாத முதலீடான ரூ.731 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்.

ADVERTISEMENT

கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் கோல்டு இடிஎஃப் திட்டங்கள் ஈா்த்த முதலீடு ரூ.3,299 கோடியாக இருந்தது. அதன் பிறகு, கடந்த ஓராண்டாகவே கோல்டு இடிஎஃப் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு சிறப்பான அளவில் ஏற்றம் கண்டு வருகிறது.

ஏப்ரல் இறுதி நிலவரப்படி ரூ.9,198 கோடியாக இருந்த கோல்டு இடிஎஃப் திட்டங்களில் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு மே மாத இறுதியில் ரூ.10,102 கோடியாக அதிகரித்துள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT