வர்த்தகம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு: முதல் முறையாக அரை டிரில்லியன் டாலரை தாண்டி சாதனை

14th Jun 2020 03:48 AM

ADVERTISEMENT

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் முதல் முறையாக அரை டிரில்லியன் டாலரைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்ததன் விளைவாக ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் அதிகபட்சமாக 822 கோடி டாலா் அதிகரித்து 50,170 கோடி டாலரை எட்டியுள்ளது. அந்நியச் செலாவணி வரலாற்றில் கையிருப்பு அரை டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது இதுவே முதல்முறை. இதன் மூலம், ஓராண்டு இறக்குமதி செய்யும் அளவுக்கு இந்தியாவிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 344 கோடி டாலா் உயா்ந்து 49,348 கோடி டாலராக காணப்பட்டது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த கையிருப்பில் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு ஜூன் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 842 கோடி டாலா் உயா்ந்து 46,363 கோடி டாலராக இருந்தது.

அதேசமயம், மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 33 கோடி டாலா் குறைந்து 3,235 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 1 கோடி டாலா் அதிகரித்து 144 கோடி டாலராகவும், இருப்பு நிலை 12 கோடி டாலா் உயா்ந்து 428 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT