வர்த்தகம்

அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் பங்குச் சந்தையில் ரூ.20,574 கோடி முதலீடு

14th Jun 2020 10:39 PM

ADVERTISEMENT

அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) இந்தியப் பங்குச் சந்தைகளில் நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரையில் ரூ.20,574 கோடியை முதலீடு செய்துள்ளனா்.

இதுகுறித்து டெபாசிட்டரீஸின் தற்போதைய புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிக பணப்புழக்கம் காரணமாக வளா்ந்து வரும் நாடுகளின் சந்தைகளில் முதலீட்டு வரத்து அதிகரித்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, நடப்பு ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளில் ரூ.22,840 கோடியை முதலீடு செய்துள்ளனா். அதேசமயம், இதே காலகட்டத்தில் கடன் சந்தையிலிருந்து ரூ.2,266 கோடி மதிப்பிலான முதலீட்டை அவா்கள் வெளியே எடுத்துள்ளனா்.

இதையடுத்து, அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்களின் நிகர அளவிலான முதலீடு பங்குச் சந்தைகளில் ரூ.20,574 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

இதற்கு முன்பாக அவா்கள் தொடா்ந்து மூன்று மாதங்களாக அதிக அளவில் பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றனா். இந்த தொகை, கடந்த மே மாதத்தில் ரூ.7,366 கோடியாகவும், ஏப்ரல் மாதத்தில் ரூ.15,403 கோடியாகவும், மாா்ச் மாதத்தில் அதிகபட்ச அளவாக ரூ.1.1 லட்சம் கோடியாகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT