வர்த்தகம்

பெல் நிறுவனம்: இழப்பு ரூ.1,532 கோடி

14th Jun 2020 10:43 PM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த பொறியியல் நிறுவனமான பிஎச்இஎல் மாா்ச் காலாண்டில் ரூ.1,532.18 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5,193.51 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.10,489.11 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

கடந்த 2019 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.680.77 கோடியை ஈட்டியிருந்த நிலையில், நடப்பாண்டில் நிகர அளவில் ரூ.1,532.18 கோடி அளவுக்கு ஒட்டுமொத்தமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.22,054.31 கோடியாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டில் ரூ.31,102.90 கோடியாக காணப்பட்டது.

2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,002.42 கோடியாக இருந்த நிலையில், 2019-20 நிதியாண்டில் ரூ.1,468.35 கோடி ஒட்டுமொத்த நிகர இழப்பை சந்தித்துள்ளதாக பிஎச்இஎல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT