வர்த்தகம்

மஹிந்திரா நிகர இழப்பு ரூ.3,255 கோடி

13th Jun 2020 03:53 AM

ADVERTISEMENT

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு நான்காவது காலாண்டில் ரூ.3,255.02 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக ரூ.9,004.72 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.13,807.88 கோடியுடன் ஒப்பிடும்போது மிக குறைவாகும்.

2018-19 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.969.25 கோடி நிகர லாபம் ஈட்டியது. இந்த நிலையில், கடந்த 2019-20 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.3,255.02 கோடி ஒட்டுமொத்த நிகர இழப்பைச் சந்தித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2019-20-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய நிகர வருமானம் ரூ.44,865.52 கோடியாகவும், நிகர லாபம் ரூ.739.71 கோடியாகவும் இருந்தது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT