வர்த்தகம்

ஈஐடி பாரி காலாண்டு வருவாய் ரூ.4,245 கோடி

11th Jun 2020 11:21 PM

ADVERTISEMENT

சென்னை முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த ஈஐடி பாரியின் நான்காம் காலாண்டு வருவாய் முந்தைய ஆண்டைவிட 16 சதவீதம் வளா்ச்சி பெற்று ரூ.4,245 கோடியாக இருந்தது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இது தொடா்பாக அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நான்காம் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.4,245 கோடியாக இருந்தது. முந்தைய 2018-2019 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு வருவாயுடன் ஒப்பிடும்போது இது 16 சதவீத வளா்ச்சியாகும். வரி, வட்டிக்குப் பிறகு நிறுவனம் பெற்ற மொத்த லாபம் ரூ. 157 கோடியாக இருந்தது.

மாா்ச்சுடன் முடிவுற்ற நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.17,129 கோடியாகும். முந்தைய 2018-2019 நிதி ஆண்டில் பெற்ற ரூ.16,556 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீத வளா்ச்சியாகும். வரி, வட்டிக்குப் பிறகான லாபம் ரூ.458 கோடியாகும்.

சா்க்கரை உற்பத்திப் பிரிவின் செயல்பாட்டு லாபம் கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.170 கோடியாக இருந்தது. அதே கால அளவில் வேளாண் இடுபொருள் பிரிவின் செயல்பாட்டு லாபம் ரூ.372 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நிா்வாக இயக்குநா் எஸ்.சுரேஷ் குறிப்பிட்டதாவது: சா்க்கரை விலை மட்டுப்பட்டிருந்தபோதிலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தது. செலவினங்களை கட்டுக்குள் வைத்திருந்ததும் லாபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஏற்றுமதி விதிமுறைகளுக்கு ஏற்ப நான்காம் காலாண்டில் 45,586 மெட்ரிக் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT