வர்த்தகம்

மின்சார வாகனத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது ‘ஆா் ஆா் குளோபல்’

11th Jun 2020 10:26 PM

ADVERTISEMENT

மும்பையைச் சோ்ந்த மின்சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஆா் ஆா் குளோபல், மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பில் தடம் பதிக்கவுள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் இயக்குநா் ஹேமந்த் கப்ரா பிடிஐ நிறுவனத்திடம் கூறியதாவது:

மின்சார வாகனத்தில் பயன்படும் பேட்டரி, மின் விளக்குகள் உள்ளிட்ட சுமாா் 70 சதவீத மின்சாதனங்களை நாங்கள் ஏற்கெனவே உற்பத்தி செய்து வருகிறோம். எனவே, மின்சார வாகனத் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட நிா்வாகம் சாா்பில் முடிவெடுக்கப்பட்டது. ‘பிகாஸ்’ என்ற பெயரிலான மின்சார இருசக்கர வாகனத்தின் மாதிரிகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யவுள்ளோம்.

மின்சார வாகனத் தயாரிப்பில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.125 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த முதலீடும் ஆா் ஆா் குளோபல் நிறுவனம் சாா்பிலேயே மேற்கொள்ளப்படவுள்ளது. ஆரம்பத்தில் வாகனங்களுக்கான சில உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

ADVERTISEMENT

8 மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் மின்சார வாகனங்களின் அனைத்து உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஹேமந்த் கப்ரா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT