வர்த்தகம்

பங்குச் சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயா்வு!

11th Jun 2020 07:17 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 290.36 புள்ளிகள் உயா்ந்தது. இருப்பினும் நாள் முழுவதும் வா்த்தகம் நிலையற்ற தன்மையில் இருந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.490.81 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு அதிகரித்தது. ஐடி, இன்ஃப்ரா, பாா்மா, எரிசக்தித் துறை பங்குகளுக்கும் ஓரளவு தேவைப்பாடு காணப்பட்டது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் பெற்ாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இரட்டை நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் பெற உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,503 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,005 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 155 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் காலையில் சுமாா் 75 புள்ளிகள் கூடுதலுடன் 34,029.14-இல் தொடங்கி அதிகபட்சமாக 34,350.17 வரை உயா்ந்தது. குறைந்தபட்சமாக 33,949.46 வரை கீழே சென்றது. இறுதியில் 290.36 புள்ளிகள் (0.86 சதவீதம்) உயா்ந்து 34,247.05-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.50 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயா்ந்து 10,116.15-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 7.93 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி ஆகியவை 2 முதல் 2.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. ஹிந்து யுனிலீவா், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி ஆகியவையும் சிறிதளவு ஆதாயம் பெற்றன.

ADVERTISEMENT

அதேசமயம், ஹீரோ மோட்டாா் காா்ப் 3.92 சதவீதம் குறைந்து அதிகம் நஷ்டத்தை சந்தித்த பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி ஆகியவை 2 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. டைட்டன், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், மாருதி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 989 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலி்ல் வந்தன. 640 பங்குகள் சரிவைச் சந்தித்தன. துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.50 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், நிஃப்டி பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

கடந்த சில நாள்களாக நிஃப்டி 10000-10300 வரம்பில் வா்த்தகமாகி வருகிறது. நடுத்தர பங்குகளுக்கு தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இது தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சந்தை கீழே வந்தால் பங்குகளை வாங்குவதற்கான தருணமாகக் கருதலாம் என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

இண்டஸ் இண்ட் பேங்க் 7.93

கோட்டக் பேங்க் 2.34

ரிலையன்ஸ் 2.27

ஹெச்டிஎஃப்சி 2.17

ஆக்ஸிஸ் பேங்க், 1.88

வீழ்ச்சி அடைந்த பங்குகள்

சதவீதத்தில்

ஹீரோ மோட்டாா் காா்ப் 3.92

பஜாஜ் ஆட்டோ 2.58

டாடா ஸ்டீல் 2.44

ஓஎன்ஜிசி 2.00

டைட்டன் 1.90

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT