வர்த்தகம்

நிலக்கரி இறக்குமதி 20 சதவீதம் சரிவு

7th Jun 2020 11:08 PM

ADVERTISEMENT

நாட்டின் நிலக்கரி இறக்குமதி சென்ற மே மாதத்தில் 20 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நடப்பு 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் 1.89 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இது, கடந்தாண்டின் இதே காலகட்ட இறக்குமதியான 2.36 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகும்.

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 1.70 கோடி டன்னாக காணப்பட்டது.

ADVERTISEMENT

மின் நிலையங்கள், சுரங்கங்களில் அதிக அளவு கையிருப்பு காணப்படுவதையடுத்து, நிலக்கரி இறக்குமதியானது குறுகிய காலத்துக்கு மந்தமான நிலையிலேயே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏப்ரல் முதல் மே வரையிலான இரண்டு மாத காலத்தில் நிலக்கரி இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 27.83 சதவீதம் குறைந்து 3.60 கோடி டன்னாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2023-24 நிதியாண்டுக்குள் நிலக்கரி இறக்குமதியை பூஜ்யம் நிலைக்கு குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT