வர்த்தகம்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் நிகர லாபம் 85 சதவீதம் சரிவு

4th Jun 2020 10:45 PM

ADVERTISEMENT

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் ஈட்டிய நிகர லாபம் மாா்ச் காலாண்டில் 85 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனத்தின் நிா்வாக துணைத் தலைவரும், தலைமை நிதி அதிகாரியுமான அருள்செல்வன்.டி. கூறியதாவது:

கொவைட்-19 நோய்த்தொற்று தொடா்பான பேரிடருக்கான ஒதுக்கீடு ரூ.504 கோடியாக அதிகரித்தது. இதையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் 85 சதவீதம் சரிவடைந்து ரூ.43 கோடியானது. கடந்த 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிகர லாபம் ரூ.292 கோடியாக காணப்பட்டது.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,186 கோடியிலிருந்து 11 சதவீதம் குறைந்து ரூ.1,052 கோடியானது.

ADVERTISEMENT

நிறுவனத்தின் கடன் புத்தகத்தில் ஏறக்குறைய 75 சதவீதம் மாத தவணை தள்ளிவைப்பு திட்டத்தின் கீழ் உள்ளது. இதில், 76 சதவீத வாடிக்கையாளா்களுக்கு மாதத் தவணை தள்ளிவைக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான்காவது காலாண்டில் மொத்த கடன் வழங்கும் நடவடிக்கைகள் ரூ.8,893 கோடியிலிருந்து 36 சதவீதம் குறைந்து ரூ.5,663 கோடியானது.

மாா்ச் காலாண்டில் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீட்டு நடைமுறையின் மூலமாக நிறுவனம் ரூ.900 கோடியை திரட்டிக் கொண்டது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT