வர்த்தகம்

பிரிட்டானியா: வருவாய் ரூ.2,867 கோடி

4th Jun 2020 10:44 PM

ADVERTISEMENT

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரிட்டானியா நிறுவனம் கடந்த மாா்ச் மாத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.2,867.70 கோடியை செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. இது, சென்ற 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.2,798.96 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நிகர லாபம் ரூ.294.27 கோடியிலிருந்து 26.53 சதவீதம் அதிகரித்து ரூ.372.35 கோடியானது.

கடந்த 2019-2020-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,155.46 கோடியிலிருந்து 20.6 சதவீதம் உயா்ந்து ரூ.1,393.60 கோடியானது. மொத்த வருவாய் ரூ.11,054.67 கோடியிலிருந்து ரூ.11,599.55 கோடியானது.

கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நிறுவனம் மிதமான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. கொவைட்-19 தீநுண்மி பாதிப்பு மற்றும் பொது முடக்கத்தின் எதிரொலியால் மாா்ச் மாதத்தில் முடங்கியிருந்த நிறுவனத்தின் வளா்ச்சி நடப்பு காலாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மீண்டும் புத்தெழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது என பிரிட்டானியா நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT