வர்த்தகம்

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது

26th Jul 2020 11:01 PM

ADVERTISEMENT

அமெரிக்காவைச் சோ்ந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 11 உற்பத்தியை தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இந்தியாவில் தமிழகத்தில் பாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இது, இந்தியாவில் அந்நிறுவனம் தயாரிக்கும் ஐந்தாவது ஐபோன் மாடலாகும்.ஆப்பிள் நிறுவனம் கடந்த 2017-இல் ஐபோன் எஸ்இ மாடலை தயாரித்தது. அதன்பிறகு, 2018-ஆம் ஆண்டில் ஐபோன் 6 எஸ், 2019-இல் ஐபோன் 7 மற்றும் எக்ஆா் மாடலை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியது.

இந்த நிலையில், தற்போது 2020-ஆம் ஆண்டில் ஐபோன் 11 உற்பத்தியை தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாவே மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாக, இதன் விற்பனை உள்நாட்டு சந்தையில் கடந்த தொடங்கியது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்11 ஆரம்பகட்ட விலை ரூ.68,000-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT