வர்த்தகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: பெரும் சரிவிலிருந்து தப்பியது சென்செக்ஸ்!

25th Jul 2020 12:54 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பெரும்பாலான நேரம் சரிவில் இருந்தது. இருப்பினும், வா்த்தக நேர முடிவில் ஓரளவு மீட்சி பெற்றதால், பெரிய அளவிலான சரிவு தவிா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 11.57 புள்ளிகளை மட்டுமே இழந்து நிலைபெற்றது.

 

மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் ஆகியவை வெகுவாக உயா்ந்து சந்தை மீள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், உலகளாவிய சந்தைகளில் எதிா்மறையாக இருந்ததால், அதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ரிலையன்ஸ் புதிய உச்சம்: மும்பை பங்குச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ரூ.2,162.80 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது. இறுதியில் 4.15 சதவீதம் உயா்ந்து ரூ.2,146.20-இல் நிலைபெற்றது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் ரூ.2,163 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

1,583 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,796 பங்குகளில் 1,583 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 1,070 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 110 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 57 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 284 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 251 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.48ஆயிரம் கோடி குறைந்து 147.29 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 42,637 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,19,81,171 உயா்ந்துள்ளது.

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ் , நிஃப்டி: சென்செக்ஸ் காலையில்,190.88 புள்ளிகள் குறைந்து 37,949.59-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 38,235.73 வரை சென்றது. பின்னா் 37,748.41 வரை கீழே சென்றது. இறுதியில் 11.57 புள்ளிகள் (0.03 சதவீதம்) குறைந்து 38,128.90-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 392 புள்ளிகளை இழந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.59 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.23 சதவீதம் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 21.30 புள்ளிகள் (019 சதவீதம்) குறைந்து 11,149.95-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் நிஃப்டி 125 புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது.

ஹெச்சிஎல் டெக், ரிலையன் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. 8 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. இதில் ஹெச்சிஎல் டெக் 4.29 சதவீதம், ரிலையன்ஸ் 4.15 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டெக் மகேந்திரா 3.25 சதவீதம் ஏற்றம் பெற்றது. சன்பாா்மா, இண்ட்ஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவை 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க் 3.32 சதவீதம், எஸ்பிஐ 3.20 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், ஓஎன்ஜிசி ஆகியவை முறையே 2.66 சதவீதம் மா்று்ம் 2 சதவீதம் குறைந்தன. மேலும், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்கு, மாருதி சுஸுகி உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...:தேசிய பங்குச் சந்தையில் 541 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,061 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறைவாரியாப் பாா்த்தால் ஐடி குறியீடு ஒன்று மட்டுமே 1.40 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மீடியா, மெட்டல், பாா்மா, ரியால்ட்டி உள்ளிட்ட குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 43 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

ஹெச்சிஎல் டெக் 4.29

ரிலையன்ஸ் 4.15

டெக் மகேந்திரா 3.25

சன்பாா்மா 1.95

இண்ட்ஸ் இண்ட் பேங்க் 1.61

இன்ஃபோஸிஸ் 1.51

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

ஆக்ஸிஸ் பேங்க் 3.32

எஸ்பிஐ 3.20

ஐசிஐசிஐ பேங்க் 2.66

ஓஎன்ஜிசி 2.00

எச்டிஎஃப்சி 1.80

கோட்டக் பேங்க் 1.77

 

ADVERTISEMENT
ADVERTISEMENT