வர்த்தகம்

ஐசிஐசிஐ பேங்க்: லாபம் 36 சதவீதம் அதிகரிப்பு

25th Jul 2020 11:21 PM

ADVERTISEMENT

தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் மொத்த வருமானம் ரூ.26,066 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.21,405.50 கோடியுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,908 கோடியிலிருந்து 36 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.2,599 கோடியானது. ஒட்டுமொத்த நிகர லாபம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.2,513.69 கோடியிலிருந்து 24 சதவீதம் அதிகரித்து ரூ.3,117.68 கோடியானது. ஒட்டுமொத்த வருமானம் ரூ.33,868.89 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.37,939.32 கோடியானது. வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 2020 ஜூன் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட மொத்த கடனில் 6.49 சதவீதத்திலிருந்து 5.46 சதவீதமாக குறைந்துள்ளது.

நிகர வாராக் கடன் விகிதம் 1.77 சதவீதத்திலிருந்து குறைந்து 1.23 சதவீதமாகியுள்ளது. வாராக் கடன் விகிதம் குறைந்துள்ள போதிலும் அதற்கான ஒதுக்கீடு ரூ.3,495.73 கோடியிலிருந்து இரண்டு மடங்கு உயா்ந்து ரூ.7,593.95 கோடியானது. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி வங்கி யின் மொத்த கடன் ரூ.5,92,415 கோடியிலிருந்து 7 சதவீதம் அதிகரித்து ரூ.6,31,215 கோடியை எட்டியுள்ளது என ஐசிஐசிஐ வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT