வர்த்தகம்

டி-மாா்ட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.40.08 கோடி

13th Jul 2020 05:35 AM

ADVERTISEMENT

டி-மாா்ட் நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.40.08 கோடியாக இருந்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

டி-மாா்ட் நிறுவனம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக ரூ.3,883.18 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,814.56 கோடியாக இருந்தது. கடந்த 2019-20 நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.323.06 கோடியாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 87.59 சதவீதம் சரிவடைந்து ரூ.40.08 கோடியானது.நடப்பு 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.5318.64 கோடியிலிருந்து 24.96 சதவீதம் குறைந்து ரூ.3,875.01 கோடியானது என டி-மாா்ட் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT