வர்த்தகம்

ஆயுள் காப்பீட்டு துறை முதலாமாண்டு பிரீமியம் ரூ.49,335 கோடி

13th Jul 2020 05:23 AM

ADVERTISEMENT

ஆயுள் காப்பீட்டு துறையின் முதலாமாண்டு பிரீமியம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.49,335 கோடியாக குறைந்துள்ளது. இதுகுறித்து கோ் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதலாமாண்டு பிரீமியம் 18.6 சதவீதம் சரிவடைந்து ரூ.49,335 கோடியாக இருந்தது. இது, 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.60,637 கோடியாக காணப்பட்டது.இதையடுத்து, ஒட்டுமொத்த பிரீமியம் ஜூன் காலாண்டில் ரூ.10 லட்சம் கோடியிலிருந்து 12.9 சதவீதம் குறைந்து ரூ.8.8 லட்சம் கோடியானது.நடப்பாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதலாமாண்டு பிரீமியம் முறையே 32.6 சதவீதம் மற்றும் 27.9 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த எல்ஐசி நிறுவனத்தின் முதலாமாண்டு பிரீமியம் 18.5 சதவீதம் குறைந்தது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் முதலாமாண்டு பிரீமியம் 81.2 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. தனியாா் துறை நிறுவனங்களின் முதலாமாண்டு பிரீமியம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.2 சதவீதம் சரிவைச் சந்தித்தது. இது, 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் 32 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது என கோ் ரேட்டிங் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT