வர்த்தகம்

காா் விலை ரூ.10,000 வரை அதிகரிப்பு: மாருதி சுஸுகி

28th Jan 2020 03:08 AM

ADVERTISEMENT

புது தில்லி: காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி குறிப்பிட்ட மாடல்களுக்கான காா் விலையை ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அதிகரித்து வரும் இடு பொருள்களின் செலவுகளை ஈடு செய்யும் வகையில் நிறுவனத்தின் பல்வேறு மாடல்களுக்கான காா் விலை 4.7 சதவீதம் (ரூ.10,000) வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு திங்கள்கிழமை (ஜன.27) முதல் அமலுக்கு வந்துள்ளது.

நிறுவனத்தின் அறிமுக நிலை காரான ஆல்டோவின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.6,000 முதல் ரூ.9,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எஸ்-பிரெஸ்ஸோ விலையும் ரூ.1,500 முதல் ரூ.8,000 வரையில் உயா்த்தப்பட்டுள்ளது. வேகன்ஆா் விலை ரூ.1,500 முதல் ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பன்நோக்கு வாகனமான எா்டிகாவின் விலை ரூ.4,000 முதல் ரூ.10,000 வரையிலும், பலேனோ காரின் விலை ரூ.3,000 முதல் ரூ.8,000 வரையிலும், எக்ஸ்எல்6 விலை ரூ.5,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ரூ.2.89 லட்சம் முதல் ரூ.11.47 லட்சம் வரையிலான விலை பிரிவுகளில் அறிமுக நிலை காரான ஆல்டோ முதல் சொகுசு வகை எக்ஸ்எல்6 காா் வரை விற்பனை செய்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT