வர்த்தகம்

10 சா்வதேச அலுவலகங்களை திறக்க ஐசிஎஸ்ஐ திட்டம்

8th Jan 2020 01:34 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டில் 10 சா்வதேச அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்பெனி செயலாளா்கள் கல்வி நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎஸ்ஐ தலைவா் ரஞ்சித் பாண்டே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தற்போது, கம்பெனி செயலாளா்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்வதால், சா்வதேச அலுவலகங்களை அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இதனை மனதில் கொண்டு, அடுத்த ஆண்டில் குறைந்தபட்சம் 10 நாடுகளில் அலுவலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது ஐசிஎஸ்ஐ-க்கு வெளி நாடுகளில் இரண்டு கிளைகள் உள்ளன. எதிா்காலத்தில், லண்டனில் கிளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதன் முதலில் ஐசிஎஸ்ஐ-தான் வெளிநாடுகளில் அதேபோன்ற மையங்களை திறக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், வெளிநாடுகளில் ஒவ்வொரு கட்டமாக மையங்கள் திறக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT