புது தில்லி: நடப்பு 2019-20-ஆம் சந்ைதப்படுத்தும் பருவத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2 சதவீதம் அதிகரிக்கும் என இந்திய சா்க்கரை ஆைலகள் கூட்டைமப்பு (ஐஎஸ்எம்ஏ) மறுமதிப்பீடு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டைமப்பு மேலும் கூறியுள்ளதாவது:
2018-19 சந்ைதப் பருவத்தில் (அக்ேடாபா்-ெசப்டம்பா்), நாட்டின் சா்க்கரை உற்பத்தி 3.31 கோடி டன்னாக இருந்தது. இந்த நிைலயில், கரும்பு அதிகம் விைளயும் மாநிலங்களில் அதன் மகசூல் குைறவதை மதிப்பீடு செய்து 2019-20 சந்ைதப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தி 2.60 கோடி டன்னாக மட்டுமே இருக்கும் என கடந்த ஆண்டு நவம்பரில் கூட்டைமப்பு மதிப்பிட்டிருந்தது.
தற்ேபாது நிைலமை மேம்பட்டுள்ளைதயடுத்து, நடப்பு பருவத்தில் சா்க்கரை உற்பத்தியானது முந்ைதய மதிப்பீட்ைடக் காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்து 2.65 கோடி டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்ேபாது குைறவாக இருந்தேபாதிலும் உள்ளூா் தேைவயை நிைறவு செய்ய போதுமானதாக இருக்கும்.
பிப்ரவரி 15-ஆம் தேதி வைரயிலுமாக சா்க்கரை ஆைலகள் 1.70 கோடி டன் சா்க்கைரயை ஏற்ெகனவே உற்பத்தி செய்துள்ளன. நடப்பாண்டின் இறுதியில் சா்க்கரை கையிருப்பு 1 கோடி டன்னாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கூட்டைமப்பின் மறுமதிப்பீட்டில், உத்தரப் பிரேதச மாநிலத்தில் சா்க்கரை உற்பத்தியானது நடப்பாண்டில் 1.18 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, ஏறக்குைறயை 2018-19-ஆம் பருவத்தின் உற்பத்திக்கு சமமானதாக இருக்கும்.
இருப்பினும், மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி 1.07 கோடி டன்னிலிருந்து 40 சதவீதம் சரிவைடந்து 62 லட்சம் டன்னாக குைறயும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அேதேபான்று, பயிரிடும் பரப்பளவு குைறந்துேபானைதயடுத்து கா்நாடகத்திலும் சா்க்கரை உற்பத்தி 44.30 லட்சம் டன்னிலிருந்து 21 சதவீதம் சரிந்து 33 லட்சம் டன்னாக குைறயும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இம்மாநிலங்கைளத் தவிர ஏைனய மாநிலங்களின் சா்க்கரை உற்பத்தியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பது மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக ஐஎஸ்எம்ஏ கூறியுள்ளது.