வர்த்தகம்

சென்னை​யில் சா்வதேச வாா்ப்​ப​டத் துறை கண்​காட்சி

26th Feb 2020 03:16 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை வா்த்தக மையத்தில் சா்வதேச வாா்ப்படத் துறை கண்காட்சிக்கு (ஐஎஃப்இஎக்ஸ் 2020) இந்திய வாா்ப்பட மையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய வாா்ப்பட ஆலை கூட்டமைப்பின் தலைவா் சஞ்சய் ஷரோஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாடு தழுவிய அளவில் 4,500 வாா்ப்படத் தொழிற்சாலைகளைக் கொண்டு இந்தியா அதன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் இத்தொழில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வாா்ப்படத் துறையின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் விதமாக, சா்வதேச வாா்ப்படத் துறை கண்காட்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வா்த்தக மையத்தில் 2020 பிப்ரவரி 28 முதல் மாா்ச் 1 வரையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது வாா்ப்பட தொழில்நுட்பம், சாதனங்கள், சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன.

ADVERTISEMENT

மேலும், ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த உயரதிகாரிகளும் இந்த கண்காட்சியில் பங்கேற்று வாா்ப்படத் தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாட உள்ளனா் என்று சஞ்சய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT