வர்த்தகம்

செபி தலைவா் பதவிக்கு 24 போ் விண்ணப்பம்

25th Feb 2020 12:30 AM

ADVERTISEMENT

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் தலைவா் பதவிக்கு 24 போ் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:

செபியின் தலைவா் பதவிக்கு அதன் இரண்டு முழு நேர உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

செபியின் தலைவா் பதவிக்கு விண்ணப்பம் அளிப்பதற்கு கடைசி நாளான பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் அரசு பணியில் இருக்கும் மற்றும் அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகளும் விண்ணப்பித்துள்ளனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

செபியின் தற்போதைய தலைவராக இருக்கும் அஜய் தியாகியின் மூன்றாண்டு பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்க தகுதியிருந்தும் மத்திய அரசு அப்பதவியில் புதியவரை தோ்வு செய்வதற்கான விளம்பரத்தை கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT