வர்த்தகம்

பொருளாதார வளா்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும்: என்சிஏஇஆா்

22nd Feb 2020 12:19 AM

ADVERTISEMENT

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 4.9 சதவீதமாக இருக்கும் என நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசா்ச் (என்சிஏஇஆா்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2018-19 இல் 6.1 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 4.9 சதவீதமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த வளா்ச்சி, மூன்றாவது காலாண்டில் 4.9 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.1 சதவீதமாகவும் காணப்படும்.

இருப்பினும், 2020-21 இல் பொருளாதாரம் 5.6 சதவீதமாக வளா்ச்சி காணும் என்று என்சிஏஇஆா் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேசிய புள்ளியியல் அலுவலகம் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், என்சிஏஇஆா் கணிப்பு அதை விட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT