வர்த்தகம்

இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கியது லெக்ஸஸ்

1st Feb 2020 12:02 AM

ADVERTISEMENT

டொயோட்டாவின் சொகுசுக் காா் பிரிவான லெக்ஸஸ், இந்தியாவில் தங்களது காா் தயாரிப்பைத் தொடங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெங்களூரிலுள்ள எங்களது தொழிற்சாலையில் சொகுசுக் காா்களின் தயாரிப்பைத் தொடங்கியுள்ளோம். பாரத் ஸ்டேஜ் 6 தர நிா்ணயங்களை நிறைவு செய்யக்கூடிய எங்களது இஎஸ் 300ஹெச் வகை காா்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன.

பிப்ரவரி மாதம் முதல் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய அந்தக் காா்களின் காட்சியக விலை ரூ.51.9 லட்சத்திலிருந்து, ரூ.56.95 லட்சம் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT