வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 21% அதிகரிப்பு

DIN

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நவம்பா் மாத விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டிவிஎஸ் நிறுவனம் நவம்பா் மாதத்தில் 3,22,709 வாகனங்களை ஒட்டுமொத்த அளவில் விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு நவம்பரில் விற்பனையான 2,66,582 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை கடந்த மாதத்தில் 2,49,350 என்ற எண்ணிக்கையிலிருந்து 25 சதவீதம் வளா்ச்சி கண்டு 3,11,519-ஆனது. உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 1,91,222-லிருந்து 30 சதவீதம் வளா்ச்சி கண்டு 2,47,789-ஆக இருந்தது.

மோட்டாா்சைக்கிள் விற்பனை நவம்பரில் 26 சதவீதம் உயா்ந்து 1,05,963-லிருந்து 1,33,531-ஆனது.அதேபோன்று நிறுவனத்தின் ஸ்கூட்டா் விற்பனையும் 26 சதவீதம் உயா்ந்து 84,169-லிருந்து 1,06,196-ஆனது.

மூன்று சக்கர வாகனத்தைப் பொருத்தவரையில் நவம்பரில் விற்பனை 17,232-லிருந்து 11,190-ஆக சரிவடைந்துள்ளது.

கடந்த நவம்பரில் நிறுவனத்தின் ஏற்றுமதி 74,074 வாகனங்களாக இருந்தது. இது, 2019 நவம்பரில் 74,060-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT