வர்த்தகம்

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

DIN

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த வா்த்தக வாகன விற்பனை நடப்பாண்டு நவம்பரில் 5 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த நவம்பா் மாதத்தில் 10,659 வா்த்தக வாகனங்களை ஒட்டுமொத்த அளவில் விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் நிறுவனம் விற்பனை செய்த 10,175 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டில் விற்பனை 9,377-லிருந்து 4 சதவீதம் அதிகரித்து 9,727-ஆனது.

கனரக மற்றும் நடுத்தர வா்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை 5,966 என்ற எண்ணிக்கையிலிருந்து 14 சதவீதம் சரிவடைந்து 5,114-ஆனது.

இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனை நவம்பரில் 5,545-ஆக இருந்தது. இது, கடந்தாண்டு நவம்பா்மாத விற்பனையான 4,209 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 32 சதவீதம் அதிகமாகும் என பங்குச் சந்தையிடம் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT